Sunday, May 13, 2012

தமிழ் நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரின் கல்வி தகுதி 6th Std பெயிலாம்????? வெளங்கிடும் தமிழ் நாடு.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முக்கூர் சுப்பிரமணியன். இவர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார். 2009ம் ஆண்டு வேட்பு மனு தாக்கல் செய்த, அபிடவிட்டில் செய்யாறு தாலுகா, கொருக்கை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1972 ஏப்ரல் 21ம் தேதி, ஆறாம் வகுப்பு படித்து பெயிலானவர் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த, 2011ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் (2011 மார்ச் 11ம் தேதி), தமிழ்நாடு திறந்த வெளி பல்கலையில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முக்கூர் சுப்பிரமணியன் கொடுத்த தகவலின்படி, 2009-10 கல்வியாண்டில் முதலாமாண்டும், 2010-11 இரண்டாம் ஆண்டும், 2011-12 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டும் படித்திருக்க முடியும். தமிழக அரசு சார்பில், வெளியிடப்படும் அமைச்சரின் விவரங்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள் அடங்கிய வெப்சைட்டில், அவருடைய கல்வித்தகுதி, பி.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரின் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், "2009ம் ஆண்டு பி.ஏ., முதலாமாண்டு தேர்வு எழுதியது உண்மை. அதில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவே செல்லவே இல்லை. அப்படி இருக்க அவர் எவ்வாறு, பி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க முடியும்' என, கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், நான் பி.ஏ., படித்து வருகிறேன். முதல் இரண்டாண்டு தேர்வு எழுதியுள்ளேன். மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவில்லை. பி.ஏ., பட்டப்படிப்பு முழுவதும் முடிக்கவில்லை. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெப்சைட்டில், கல்வித்தகுதி என்ன வெளியிடப்பட்டுள்ளது என, எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன்.இவ்வாறு கூறினார்.

Saturday, May 5, 2012

Inspiring Quotes.


  
 Failure is just another way to learn how to to do something right - Marian Wright

தோல்வி என்பது சரியானதை எப்படி செய்வது என கற்றுக்கொள்ளும் 
ஒரு வழி ஆகும்.

 


 
One great thing I have noticed about living by myself: All of my annoying habits seemed to have disappeared. - Merrill Markoe 


நான் நானாக வாழும் போது, என்னை எரிச்சலூட்டும் பழக்கங்கள் மறைந்து போகின்றன.  







 
Pretending is a very valuable skill - Meryl Streep

 
பாசாங்கு செய்வது ஒரு மதிப்பு மிக்க திறமை.







 Children trend to imitate their parents, despite their teacher's attempts to teach them good manners. - Aldo Cammarota
 

ஆசிரியர்கள் நல்ல போதனைகளை பயிற்றுவித்தாலும், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் பண்புகளையே பிரதிபலிகிறார்கள்.





One can go to war alone, but you can't build peace alone. - Jacques Chirac
 
தனியொரு ஆளாக போருக்கு போகலாம், ஆனால் அமைதியை தோற்றுவிக்க முடியாது.


Courtesy: Reader's Digest & Google

Wednesday, May 2, 2012

விவசாயிக்கு பத்மஸ்ரீ

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி என்ற விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது.தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

NEWS : Puthiyathalaimurai

நம்முடைய மதிப்பு!


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.


பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி

அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி

“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்

அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க !