தமிழ் நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரின் கல்வி தகுதி 6th Std பெயிலாம்????? வெளங்கிடும் தமிழ் நாடு.
திருவண்ணாமலை
மாவட்டம், செய்யாறு தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முக்கூர்
சுப்பிரமணியன். இவர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார். 2009ம்
ஆண்டு வேட்பு மனு தாக்கல் செய்த, அபிடவிட்டில் செய்யாறு தாலுகா, கொருக்கை,
அரசு மேல்நிலைப் பள்ளியில், 1972 ஏப்ரல் 21ம் தேதி, ஆறாம் வகுப்பு படித்து
பெயிலானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த, 2011ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் (2011 மார்ச் 11ம்
தேதி), தமிழ்நாடு திறந்த வெளி பல்கலையில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து
வருவதாக குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முக்கூர்
சுப்பிரமணியன் கொடுத்த தகவலின்படி, 2009-10 கல்வியாண்டில் முதலாமாண்டும்,
2010-11 இரண்டாம் ஆண்டும், 2011-12 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டும்
படித்திருக்க முடியும். தமிழக அரசு சார்பில், வெளியிடப்படும் அமைச்சரின்
விவரங்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள் அடங்கிய வெப்சைட்டில்,
அவருடைய கல்வித்தகுதி, பி.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,
அமைச்சரின் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், "2009ம் ஆண்டு பி.ஏ.,
முதலாமாண்டு தேர்வு எழுதியது உண்மை. அதில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி
பெறவில்லை. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவே செல்லவே இல்லை.
அப்படி இருக்க அவர் எவ்வாறு, பி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க முடியும்' என,
கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன்
கூறியதாவது:தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், நான் பி.ஏ., படித்து
வருகிறேன். முதல் இரண்டாண்டு தேர்வு எழுதியுள்ளேன். மூன்றாம் ஆண்டு தேர்வு
எழுதவில்லை. பி.ஏ., பட்டப்படிப்பு முழுவதும் முடிக்கவில்லை. அரசு சார்பில்
வெளியிடப்பட்டுள்ள வெப்சைட்டில், கல்வித்தகுதி என்ன வெளியிடப்பட்டுள்ளது
என, எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன்.இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment