கி.பி 1044 ஆண்டை ஒட்டி இடைக்காலச் சீனாவில் முதன்முதல் ராக்கெட் கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப் படுகிறது. ஆனால் 1232 இல் சைனா மங்கோலியரை எதிர்த்துப் போரிட்ட போதுதான் மெய்யாக அவை போர்க்களத்தில் நேராகப் பயன்படுத்தப் பட்டன. 1696 இல் ராபர்ட் ஆண்டர்ஸன் என்னும் ஆங்கிலேயர் எப்படி ராக்கெட் குழல்வடிவுகள் [Rocket Moulds] பண்ணுவது, எப்படி எரிசக்தி உந்து தூள்களை [Rocket Propellants] தயாரிப்பது, எப்படி அவற்றின் பரிமாணங்களைக் கணக்கிடுவது என்று விளக்கிடும் ஈரடுக்குத் தொகுப்பு நூலை எழுதினார். மைசூர் புலிமன்னர் எனப்படும் திப்பு சுல்தான் கைவசம் 1750 ஆம் ஆண்டில் 5000 எறிகணைகள் இருந்ததாகத் தெரிகிறது. 1780 இல் இந்திய அரசருடன் போரிட்ட “குண்டூர் யுத்தத்தில்” [Battle of Guntur] முதன்முதல் பிரிட்டீஷ் படைகள் இந்திய எறிகணைகளால் தாக்கப் பட்டன. 1799 ஆம் ஆண்டில் மைசூரில் பிரிட்டீஷ் ராணுவத்துடன் நடந்த போரில் ஹைதர் அலி, அவரது புலிப் புதல்வன் திப்பு சுல்தான் இருவரும் மூங்கில் கம்புகளில் கட்டி விடுத்த எறிகணை ராக்கெட்டுகள், எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்தன. திப்பு சுல்தான் தோற்றுப் போன பின்பு பிரிட்டீஷ் படையினர் ஸ்ரீரங்க பட்டணத்தில் 700 பயன்படும் எரியா ராக்கெட்டுகளையும், 9000 பயன்பட்டுக் காலியான எரிந்த ராக்கெட்டுகளையும் கண்டதாக அறியப் படுகிறது. எட்டு அங்குல நீளம், ஒன்றரை முதல் மூன்று அங்குல விட்டமுள்ள இரும்புக் குழல் எறிகணைகள் 4 அடி நீளமுள்ள மூங்கில் முனைக் கம்புகளில் கட்டப் பட்டிருந்தன. அவை எறிந்து ஏவப்படும் போது சுமார் 3000 அடித் தூரம் பாய்ந்து செல்லும். அவை யாவும் மைசூர் தாரமண்டல் பேட்டையில் தயாரிக்கப் பட்டவை.
மைசூர்ப் போருக்குப் பிறகு 1804 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் வில்லியம் காங்கிரீவ் [William Congreve] என்பவர் திப்பு சுல்தான் பயன்படுத்திய எறிகணையைக் காப்பி எடுத்து விருத்தி செய்து 9000 அடி தூரம் செல்லும்படி மேம்படுத்தினார். அந்த எறிகணைகள் 1812 - 1815 ஆண்டுகளில் அமெரிக்க சுதந்திரப் போருக்குப் பிறகு அமெரிக்ககனடாச் சண்டையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பிரிட்டன் பயன்படுத்தியதாக அறியப் படுகிறது.
காங்கிரீவ் ராக்கெட்:
வில்லியம் காங்கிரீவ் தனது ராக்கெட்டில் இரும்புக் குழலும், கருப்புத் தூளுமிட்டு, ஏவுநிறையைச் சமப்படுத்த 16 அடிக் கம்பைப் பயன்படுத்தினார். 1806 இல் பிரிட்டீஷ் கப்பல் படையினர் காங்கிரீட் ராக்கெட்டுகளைக் பிரெஞ்ச் வீரன் நெப்போலியன் படைகள் மீது வீசினர். அடுத்து ஈரோப்பில் 1807 ஆண்டில் கோபன்ஹேகனுக்கு (டென்மார்க்) எதிராக 25,000 காங்கிரீவ் எறிகணைகள் உந்தி எறியப்பட்டன. பிறகு வில்லியம் ஹேல் [William Hale] என்னும் அடுத்தோர் பிரிட்டீஷ் நிபுணர் கம்புகளற்ற எறிகணைகளை ஆக்கினார். அமெரிக்க ராணுவம் 1846 - 1848 ஆண்டுகளில் நடந்த மெக்ஸிகன் போரிலும், ஆப்ரஹாம் லிங்கன் காலத்து உள்நாட்டுப் போரிலும் [Civil War (1861 - 1865)] காங்கிரீவ் ராக்கெட்டுகள் பயன்பட்டதாகத் தெரிகிறது.
பிரமாண்டமான புவிஈர்ப்புச் சக்தியை மீறி செயற்கைக் கோள்களும், விண்வெளிக் கப்பல்களும், அண்ட வெளி நிலையங்களும் வானில் ஏவப்பட்டு, பூமியைப் பவனி வரத் தூக்கிச் சென்ற அசுர ராக்கெட் எஞ்சின்களை ஆக்கிய நவீன எஞ்சினியர், விஞ்ஞானிகளில் ஒப்பற்றவர், வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun]. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பேரழிவு உண்டாக்கிய ஜெர்மன் V2 ராக்கெட் களை, கட்டளை ஏவுபாணங்களாய் [Guided Missiles] ஏவிய, வெர்னர் பிரெளன் தான் அமெரிக்காவின் புகழ் பெற்ற ராக்கெட் விஞ்ஞானி.

No comments:
Post a Comment