Saturday, October 12, 2013

இது நமக்குத் தேவையா?

காற்று வாங்கப்போய் காதல் வாங்கி வருவதில் தவறில்லை. ஆனால் ஊசி வாங்கப் போய் ஊரையே வாங்கி வருவது அவசியமா? இன்று இதுதான் நடக்கிறது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வீட்டைப் பூட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் கிளம்பி விடுகிறார்கள். கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கிறார்கள். காதில் கேட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு வருகிறார்கள். அதுவும் தீராமல் அடுத்த வாரத்துக்கும் சிலவற்றைத் திட்டமிட்டே திரும்புகிறார்கள். மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த நுகர்வு கலாச்சாரம் எப்படி வந்தது?
அடுத்தவருக்காக வாழ்வதும் அடுத்தவரைப் பார்த்து வாழ்வதும்தான் முதலிரண்டு காரணங்களாக நிற்கின்றன. இது இல்லை என்றால் அவர்கள் என்ன சொல்வார்கள்? அதை வாங்கவில்லை என்றால் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்புக்குத் தீனிபோடவே பலர் பல பொருட்களை வாங்குகிறார்கள். கொட்டாவி போலத்தான் ஷாப்பிங் செய்வதும். ஒருவர் நகவெட்டி வாங்கினாலும், அந்தத் தெருவில் இருக்கிற அனைவரும் அதையே வெவ்வேறு வடிவங்களிலும் தரங்களிலும் வாங்கிவிடுவார்கள்.
அடுத்ததாக மக்களிடம் பொங்கிப் பிரவாகிக்கும் அழகுணர்ச்சி. இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் எவ்வளவு அழகு என்று சிலாகித்தே பல பொருள்களை வீட்டில் சேர்த்திருப்பார்கள். சுவரில் மாட்டுகிற ரோஜாக்கள் சிரிக்கிற அட்டையில் துவங்கி, தரையில் ஒட்டுகிற ஸ்டிக்கர் கோலம் வரை இவர்களின் அழகுத் தேடல் நீண்டுகொண்டே செல்லும். சில மாதங்கள் கழித்து இவற்றில் பல குப்பைத் தொட்டிகளில் பரிதாபமாய் முழிக்கும். குப்பையும் செல்வமாகும் என்பதை மாற்றிச் செல்வமும் குப்பையாகும் என்பதை நிரூபிக்கும் வித்தகர்கள் இவர்கள்.
மக்களை மாபெரும் நுகர்வோர்களாக மாற்றியதில் ஊடகங்களின் பங்கு இல்லாமலா? அவை காட்சிப்படுத்துகிற கவர்ச்சி விளம்பரங்களை நம்பித்தான் இன்று பல முதலாளிகள் பெரும் முதலாளிகளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரபல நடிகர் பரிந்துரைக்கிற காபியைக் குடித்தால்தான் நம் தந்தையின் மனதையோ, மனைவியின் அன்பையோ புரிந்துகொள்ள முடிகிறது. காலை வேளையில் போருக்குத் தன் சேனைகளைத் தாயார்படுத்தும் தாய்மார்கள் பெயரே வாயில் நுழையாத ஏதேனும் வஸ்துவைச் சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்கள். கௌரவமான அந்தக் காலை உணவை முடிக்காவிட்டால் இந்தச் சமூகத்தில் நம் அந்தஸ்து என்னாவது? அதை அப்படியே படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யலாம் என்பது கூடுதல் வசதி!
கால் செருப்பு பிய்ந்து போனதெற்கெல்லாம் வகை தொகை இல்லாமல் ட்ரீட் கேட்கும் நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே கையைக் கடிக்காத விலைகளில் (அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) புதுப்புது பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். வாழ்க்கையைக் கொண்டாட இது போதாதா நமக்கு? அவற்றின் எடையோ, தரமோ நாம் கொடுக்கிற பணத்துக்கு ஈடாகுமா என்ற கவலை நமக்கெதற்கு? உறைகளைப் பாருங்கள். அவைதான் எவ்வளவு பளபளப்பாக, அழகாக இருக்கின்றன! அது போதாதா?
இவை போதாதென்று நம் மனநிலை புரிந்தே புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள் சில வணிகப் புலிகள். கையில் பணம் இல்லையென்றால் என்ன? சுலபத் தவணைத் திட்டத்தில் சேர்ந்து மாபெரும் லாபம் அடைய வலைவிரிக்கின்றன அங்காடித் தெருக்கள். புடவையோடு பிரஷர் குக்கரையும் சேர்த்தே வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றன தள்ளுபடிச் சலுகைகள்.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற நம் மக்களின் மனநிலைதான். அவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே இருந்த தாம்புக் கயிறு இடைவெளியை நூலிழையாக்கிவிட்டு அதையும் சில நொடி தயக்கத்துக்குப் பிறகு அறுத்தெறிந்துவிடுகிறோம். எதைப் பார்த்தாலும் வாங்கத் துணிகிறபோது, எச்சரிக்கும் மனசாட்சியைத் துச்சமாக நினைத்துத் தவிர்த்துவிடுகிறோம். உலகமயமாக்கலின் விளைவாகப் பல்கிப் பெருகியிருக்கும் வியாபாரச் சுழலில் விரும்பியே சிக்குகிறோம். நாம் அனைவரும் நல்ல வாடிக்கையாளர்கள்தான். ஆனால் இதுவே வாடிக்கையாகிவிடக் கூடாது.
வாங்கப்போகும் பொருட்களின் பட்டியலோடு ஷாப்பிங் செல்வது நல்லது. எதை வாங்குவதாக இருந்தாலும் அந்தப் பொருள் இல்லாமல் எந்தெந்த வேலைகள் தடைபடும், அதனால் நிகழப்போகும் ஆக்கப்பூர்வமான மாற்றம் என்ன என்பதை மனதில் வைத்து அந்தப் பொருளை உங்கள் பட்டியலில் சேருங்கள். அழகுணர்ச்சி தேவைதான். அதுவே நம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடக்கூடாது. தேவையில்லை என்றால் அது சும்மா கிடைத்தாலும் வேண்டாம் என்ற மனநிலைக்கு மாற வேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், எது தேவையோ அந்தப் பொருள் மீது மட்டும் கண்கள் இருக்க வேண்டும். தவறியும் பக்கத்துப் பொருட்களின் மீது பார்வை திரும்பினால், பணம் திரும்பாது.
விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. வீட்டுக்குத் திரும்பியதும் நீங்கள் வாங்கிய தேவையில்லாத பொருட்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். என்னதான் திட்டமிட்டுக் கிளம்பினாலும் யானைக்கும் அடி சறுக்குவது சகஜம்தானே. இரண்டு பட்டியல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதற்கு மேலும் நீங்கள் வாங்கிய பொருட்கள் தேவையானவைதான் என நினைத்தால், நீங்கள் மிகச் சிறந்த வாடிக்கையாளருக்கான விருதைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

Thanks to : The Hindu - Tamil

Sunday, June 23, 2013

இது தீர்வல்ல! உரத்த சிந்தனை - ஜி.கிருஷ்ணசாமி, சிந்தனையாளர்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தனி நபரின் வருமானத்தை அளவுகோலாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குடும்பமோ அல்லது தனி மனிதனோ பொருளாதார தன்னிறைவு பெறாத வரையில், அது ஏழ்மையின் அடையாளமாகவே கொள்ளப்படும். தனி மனிதனின் ஏழ்மைக்கு காரணம், அவனது செலவுகள், வரவை மிஞ்சியதாக இருப்பது தான். வரவை மிஞ்சிய செலவு நீடிக்கையில், மனிதன் கடனாளியாகிறான். அக்கடனை அடைக்க வழி இல்லாத போது, திவாலாகி நடை பிணமாகிறான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது தான், மக்களாட்சியின் தத்துவம். அதை விடுத்து, மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் போது, மக்கள் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளே. திட்டங்கள் தீட்டுவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள கோளாறுகளும், குறைபாடுகளும் தான், நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு அடிப்படை காரணங்களாக அமைகின்றன. மக்களின் பங்களிப்பு எவ்வகையில் அமைய வேண்டும் என்ற கேள்விக்கு, விடையாக இருப்பது, வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுவதும், உற்பத்தி திறனுடன் கூடிய வருமானத்தை அதிகப்படுத்துவதும் தான். இதை நிறைவேற்றுவதன் மூலம், தனி நபர் வருமானம் உறுதி செய்யப்படுவதோடு, அவனது வங்கி சேமிப்பும் அதிகரிக்கிறது. அப்போது, அவனுடைய வாங்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இதுவே சீரான பொருளாதார தன்மையை நோக்கி பயணிக்க உதவுகிறது. விலைவாசி உயர்வாலும், பண வீக்கத்தாலும் அச்சமோ, கவலையோ கொள்ளும் நிலை தவிர்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? ஆண்டுதோறும் திட்டங்களை அதற்கேற்றாற் போல் தீட்டி, செயல்படுத்துவது தான் அதற்கு ஒரே வழி. இதற்கு, தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும், வளர்ச்சியை மைய இலக்காக கொண்டு அமைய வேண்டும். வரவினங்களை பெருக்கி, செலவினங்களை குறைத்து, நம் பட்ஜெட்டுகள் அமைய வேண்டும். அதற்கு முக்கியமாக, இலவச திட்டங்களையும், மானியங்களையும் அறவே கைவிட வேண்டும். அப்போது தான் நமது பட்ஜெட்டுகள் செலவுகளை அதிகமாக கொண்டிராது. அப்போது தேவையற்ற வரிகளை விதிக்க வேண்டிய நிர்பந்தமோ, கட்டாயமோ ஏற்படாது. நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே, தேர்தலில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாக கொண்டு, இலவச திட்டங்களை கணக்கு வழக்கில்லாமல் அறிவித்து, செயல்படுத்தி வருவது தான், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது. பல துறைகளிலும், நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், அதற்கு போதிய நிதி ஆதாரம் தேவை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, பொதுப்பணித் துறை போன்ற அனைத்து துறைகளும், செலவினங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கையில், தொழில் துறையும், வேளாண் துறையும் மட்டுமே, நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு உதவுபவைகளாக இருக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவைகளாக இருக்கிற வேளாண் மற்றும் தொழில் துறைகளை, நமது அரசுகள் புறக்கணித்து வருவதாலேயே, நாம் பொருளாதார பின்னடைவை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இதை கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கும் செயல் ஊக்கம் தராது, கிராமங்கள் தோறும் வங்கிக் கிளைகள் திறப்பதன் மூலம், எந்த பயனும் கிடைத்து விடப் போவதில்லை. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகக் கூறி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, மத்திய அரசு பல லட்சம் கோடிகள் செலவு செய்து நிறைவேற்றி வருவது, பூனை கண்ணை மூடி, பூலோகமே இருண்டு விட்டதாக கூறுவது போல் உள்ளது. தற்போது, இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு நேரடியாகவே பணம் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வேலை ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு கட்டுபடியாகாத விலை ஆகிய காரணங்களால், விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்திட்டம் கிராமப்புற மக்களை சோம்பேறிகளாக ஆக்கவே பயனுள்ளதாக இருக்கிறது. இதனால், இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு பதில், விவசாய தொழிலுக்கு மூடுவிழா கொண்டாடவே வழிவகுக்கப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்திக்கும், ஊரக தொழில் வளர்ச்சிக்கும் தேவைப்படுவது தண்ணீரும், மின்சாரமும் தான். அத்துடன் டீசல், பெட்ரோல் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். ஆனால், இதில் நமது அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதற்கான காரணமும் நமக்கு புரியவில்லை. தண்ணீரும், மின்சாரமும் நம் கைவசமே உள்ளன. இதை ஏனோ, நமது அரசியல் விற்பன்னர்கள் அறியாமல் உள்ளனர் என்பது, மற்றொரு கேள்விக்குறி. வற்றாத ஜீவநதிகளான கங்கை, பிரம்மபுத்திராவின் பெருவாரியான தண்ணீர், நாள்தோறும் கடலில் வீணாக கலந்த வண்ணம் உள்ளது. அந்நீரை, ஆறுகள் இணைப்பு, புதிய கால்வாய் அமைப்பதன் மூலம், தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு பகிர்ந்துஅளிப்பதில், என்ன தடை உள்ளது? ஆறுகள் இணைப்பு சாத்தியமானது தான் என்று தெரிந்திருந்தும், அதை செய்யாது, மாநிலங்களுக்கிடையே நீரை பகிர்ந்து கொள்வதில் மோதல் போக்கை உருவாக்குவதில் குறியாக இருக்கும் மத்திய அரசை, மக்கள் விரோத அரசு என்று கூறுவதை விட, வேறு எப்படிக் கூறுவது? மின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிற, காற்றாலை மற்றும் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தியை பெருக்க, அனைத்து வசதிகளும் நம் நாட்டில் இருக்கையில், இம்முயற்சியில் அக்கறை காட்டாது இருக்கும் நம் மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத் தனத்தை என்னவென்று கூறுவது? நாட்டின் ஒட்டுமொத்த தேவையில், 30 சதவீதம் பெட்ரோல், டீசல் நம் நாட்டிலேயே கிடைக்கிறது. மீதமுள்ள பெட்ரோல், டீசல் தேவையை ஈடுகட்ட மாற்று வழிகள் காண, இதுவரை நமது அரசுகள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. எடுத்ததற்கெல்லாம் இறக்குமதி செய்வது எனும் கொள்கையை, நம் மத்திய அரசு கடைபிடிப்பதால் தான், உலகச் சந்தையில், நம் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதற்கும், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வருவதற்கும், காரணமாக இருக்கிறது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிப்பதால், நமது பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. நமது பணம் நம்மை விட்டுப் போகாமல், நமக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளப்படுமாயின், இத்தகைய சீர்கேட்டை நாம் சந்திக்க வேண்டியது இருக்காது. முதலில் நம் நாட்டிலேயே கிடைக்கிற பொருட்களை, அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கை, மத்திய அரசு கைவிட வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் நமது ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையை வடிவமைக்க வேண்டும். லாபகரமான ஏற்றுமதி கொள்கை, நம் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கவும், ரூபாயின் மதிப்பு உயரவும் வழிவகுக்கும். தகவல், தொழில்நுட்ப துறையில், நம் நாடு வளர்ச்சி அடைந்திருக்கிற அளவிற்கு, வேளாண் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சி எட்டப்படவில்லை. இதற்கு காரணம், நம் தவறான பொருளாதார கொள்கை தான்.

நமது நில வளம், நீர் வளம் நல்ல விதத்தில் பயன்படுத்தப்படாததும், மனித சக்தியை வீணாக்குவதுமே இதற்கு முக்கிய காரணங்கள். அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்காமல் இருப்பதும், புதிய தொழில்நுட்பங்களை கையாளாததும், நமக்கு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தரமான பொருட்களை தயாரித்து, உலகச் சந்தையில் நம் பொருட்களுக்கு மவுசு ஏற்படாத வரையில், தற்போதைய பொருளாதார தேக்க நிலை நீடிக்கவே செய்யும். தரிசு நில மேம்பாடு, சொட்டு நீர் பாசனம், நவீன தொழில்நுட்பம், இயற்கை உரமிடல், கால்நடை அபிவிருத்தி, குடிசை தொழில்கள், பால், முட்டை உற்பத்தி, அவற்றை சந்தைப்படுத்துதல் ஆகியவை வேளாண் தொழில் சிறக்க உதவும். நம் நாட்டில், எத்தனையோ விதமான கச்சா பொருட்கள், இயற்கையாகவே மிக அதிக அளவில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு, நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்க, அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடல் வாழ் பிராணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, போதிய வசதி, வாய்ப்புகளை மீனவர்களுக்கு செய்து தரவேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு திட்டங்களை தீட்டி, அவற்றை முறைப்படி செயல்படுத்தினால், நம் நாடு உலகில் நம்பர் ஒன் நாடாக திகழும் என்பதில், எவ்வித ஐயமும் இல்லை. அதற்கு, முதலில் நம் அரசியல்வாதிகள், மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களாக இராமல், மக்கள் பணத்தை மக்களுக்கே செலவு செய்யும் வெள்ளை உள்ளம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

இ-மெயில்: krishna_samy2010@yahoo.com

ஜி.கிருஷ்ணசாமி, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) எழுத்தாளர், சிந்தனையாளர்

Wednesday, June 5, 2013

Samacheer kalvi is a total shit????

என் மகள் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 98.4% சதவிகிதம் எடுத்து வெற்றிப் பெற்றுள்ளாள். நானும் என் கணவரும் அந்த சந்தோசத்தைக் கொண்டாட கூட முடியவில்லை , காரணம் , முடிவு வெளிவந்த சிறிது நேரத்தில் அவள் சொன்ன வார்த்தைகளால் . . . எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த வார்த்தைகள் ..." amma samacheer is a total shit"

ஆமாம் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்க
­ியது அவளின் ஆதங்கம்.. yes there is a reason for it... அவள் படிக்கும் பள்ளியில் பாடங்களை மனப்பாடம் பண்ணும் முறையில் பாடங்களை சொல்லி கொடுப்பதில்லை..­.முழு பாடத்தையும் வாசித்து எந்த பகுதியில் இருந்து கேள்விக் கேட்டாலும் பதில் சொல்லும் முறையில் தான் அவள் படிப்பாள்..8 வது வரை(matriculati­on board இருக்கும் வரை) நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. சமச்சீர் பாடத்திட்டதை என்று அறிமுகப்படத்தின­ார்களோ அன்று தொடங்கியது இவர்களின் அறிவுப் பஞ்சம்... literally they are starving for knowledge....வெ­றும் மனப்பாட முறை..பாடத்தின்­ பின்பக்கம் கொடுத்திருக்கும­் கேள்வியில் இருந்து மட்டும் கேள்வி.... ஆங்கிலப்புத்தகத­்தில் அதிகமான இலக்கணப்பிழை...­முழுப்பரீட்சை அன்று காலை தொடங்கி அதிகப்பட்சமாக 2 மணி நேரத்தில் முழுப்புத்தக்கத­்தையும் படித்துவிடலாம்.­... பரிட்சையும் எழுதி பாஸாகிவிடலாம் போல. அந்த அளவுக்கு உள்ளது அதன் தரம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...(நிஜம­ாக social science and science தேர்வை வேண்டா வெறுப்பாக எழுதி விட்டு வந்தாள்) சரி வேறு CBSE பாடத்திட்டம் உள்ள பள்ளிக்கோ..ICSE­ பாடத்திட்டம் உள்ள பள்ளிக்கோ மாற்றாலாம் என்றால் மிக கஷ்டப்பட்டு அட்மிஷன் வாங்கிய பள்ளியாயிற்றே. அவள் படிக்கும் பள்ளிக்கூடம் சென்னையில் ஒரு பிரபலமான ஒரு பள்ளிக்கூடம். அங்கு அட்மிஷன் கிடைப்பதே கடினமான ஒன்று. இந்தி எதிர்ப்பு...ஆங்­கில எதிர்ப்பு என்று மக்களை போரடா தூண்டிக்கொண்டு இருக்கும் பெரும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் படித்தது படித்து கொண்டு இருப்பது இந்த பள்ளியில் தான்..ஏன் நம் முதல்வரும் இந்த பள்ளியின் படைப்பு தான்.ஆனால் இன்று அந்த அரசியல் பிரமுகர்களே தங்கள் பிள்ளைகளை CBSC பள்ளிகளுக்கு மாற்றுகிறார்கள்­. அது தனிக்கதை... என் ஆதங்கம் அது அல்ல. ஒரு ICSE பாடத்திட்டதில் 6வது வகுப்புக்கு இணையாக மட்டுமே உள்ளது நமது சமச்சீர் பாடத்திட்டத்தின­் 10வது வகுப்பு. ஒருவேளை இவள் சிறுமியாக இருக்கும்போது என்றால் நிச்சயமாக சமச்சீர்ப் பாடத்திட்டத்தில­் உள்ளப் பள்ளியில் சேர்த்து இருக்க மாட்டோம்.

இங்கு என் ஆதங்கமே நம் மாநில மாணவர்கள் எப்படி அடுத்த மாநில மாணவர்களோடு compete பண்ணமுடியும்?? தற்போது நடந்து முடிந்த IIT ( JEE main) நுழைவு தேர்வில் அகில இந்திய அளவில் மொத்தம் எழுதிய மாணவர்கள் கிட்டதட்ட 18 லட்சம் மானவர்கள். இதில் தமிழகத்தில் தேர்வு பெற்ற மாணவர்கள் வெறும் 3195. இதிலும் சென்னை மாணவர்கள் 2640 பேர் வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் வெறும் 555 பேர் மட்டுமே. தமிழகம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறது என்பதற்க்கு வேறு என்ன சான்று வேண்டும்??
ஏற்கனவே நம் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.கபில்சிபில­் அவர்கள்அகில இந்திய அளவிற்விக்கு இஞ்சினியரிங் கல்லூரிக்கு ஒரே நுழைவு தேர்வு ( single window system) வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்..ஒர­ு வேளை அப்படி ஆகும் பட்சத்தில் என்ன நடக்கும்? வெறும் மேல்தட்டு பிள்ளைகளும் பிற மாநில பிள்ளைகள்(CBSE பயிலும் மாணவர்கள்) மட்டும் தான் இஞ்சினியரிங் கல்லூரிக்குள் நுழைய முடியும். மற்ற மாநிலங்களோதோடு எந்த விதத்திலும் போட்டி போட முடியாத நிலையிலே இப்போது சமச்சீர் பயிலும் நமது குழந்தைகளின் நிலை. ஒரு 6வது வகுப்பு குழந்தைகளுக்கு கேட்கவேண்டிய வினாத்தாளை 10வது வகுப்பு பிள்ளைகளுக்கு கேட்டால் ஏன் 9 முதலிடமும்..56 இரண்டாவது இடமும் 130க்கு மேல் மூன்றாவது இடமும் வராது??
நம் அரசியல்வாதிகள் இங்கு உள்ள எழைகளையும் அடித்தட்டு மக்களையும் தங்கள் கீழ் அடிமைப்படுத்தி வைக்கும் ஏகாதிபத்தியமுறை­யே இன்றைய சமச்சீர் பாடத்திட்டம்...­இதை நல்ல தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு மாற்றியமைப்பது மிக மிக அவசியம். . ...இல்லையென்றால­் தலைவர்களுக்கு பேனர்க் கட்டவும்..பிளக்­ஸ் போர்ட் மாட்டவும் கள்ள வோட்டு போட மட்டுமே நம் பிள்ளைகள் பயன்படுவார்கள்.­...இது ஒரு குழந்தையின் தாயாக என் ஆதங்கப் புலம்பல்...இதற்­கு தயவுசெய்து எந்த அரசியல் ஆர்வலர்களின்...­விமர்சனமோ..ஆக்ர­ோஷக் குரலோ வேண்டாம்...