Sunday, October 10, 2010

சொந்த மண்ணில்!

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா ..........!

Sunday, July 11, 2010

என்ன தான் நடக்கிறது காஷ்மீரில்? அமைதிக்கு வேட்டு வைப்பது யார்?

மீண்டும் ஒரு முறை கலவர பூமியாக மாறி இருக்கிறது காஷ்மீர். கலவரத்தை கட்டுப்படுத்த, பத்தாண்டுகளுக்கு பின், முதல் முறையாக ராணுவம் வரவழைக்கப்படும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமாக மாறிப் போயிருக்கிறது. போராட்டம், கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என, காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் கலவரக் காடாக காட்சி அளிக்கின்றன. இந்த கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக மத்திய அரசே வெளிப்படையாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் அப்படி என்னதான் நடக்கிறது.


பிரிவினையில் துவங்கிய விபரீதம் : நாட்டு பிரிவினையின் போது துவங்கிய பிரச்னை, காஷ்மீரில் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பகுதி இந்தியாவில் உள்ளது. இந்த எஞ்சிய பகுதியையும் தன் பக்கம் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, தங்களது நாட்டில் பயங்கரவாத முகாம்களை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ வைத்து, வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். சில நேரங்களில் காஷ்மீரைத் தாண்டியும் டில்லி, மும்பை என, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளின் கரங்கள் நீண்டு விடுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் பிரச்னை இருந்து வந்தாலும், கடந்த 1987ல் இருந்து தான், வன்முறை அதிகம் பரவியது. அன்று துவங்கி கடந்தாண்டு ஜூன் வரை காஷ்மீர் கலவரத்தில் 47 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்ப்பலி அதிகரித்தாலும், கலவரம் நின்றபாடு இல்லை.


பிரிவினைவாதிகளின் கைவரிசை : இந்தியா-பாக்., நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக சில காலமாக அடங்கிப் போயிருந்த வன்முறை, தற்போது மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பாமல் பார்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், இங்கு செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பினர் தான். இவற்றிலேயே மிதவாத அமைப்பு, தீவிர அமைப்பு என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களில் ஒரு தரப்பினர், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர், இந்தியாவிலேயே தொடர்ந்து தன்னாட்சி பெற்ற மாகாணமாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அவ்வப் போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பதே இவர்களின் பிரதான வேலை.


தற்போதைய கலவரத்துக்கு காரணம் என்ன?கடந்த 20 நாட்களுக்கு முன், காஷ்மீரின் சோபூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு இளைஞர் பலியானார். இந்த பிரச்னை தான், தற்போது காஷ்மீர் கலவரக் காடாக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை கலவரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்ரீநகர், குப்வாரா, புலவாமா, பாரமுல்லா, புட்கம் ஆகிய மாவட்டங்கள், 20 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.


இதுவரை 15 பேர் பலி : ஊரடங்கு உத்தரவை மீறி, ஏராளமான இளைஞர்கள் வீதிக்கு வந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் என்றால், சாதாரண போராட்டம் அல்ல. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் மீது, சரமாரியாக கற்களை வீசி தாக்குவது, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது போன்ற போராட்டங்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கல் வீச்சில் காயமடைந்த பாதுகாப்பு படையினர், திருப்பி தாக்கத் துவங்கி விடுகின்றனர். தடியடி, கண்ணீர் புகை ஆகியவற்றை தாண்டி, சில நேரங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். சில நேரங்களில், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, வீட்டிற்குள் இருந்து, ஜன்னல் வழியாக கலவரத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி பெண் ஒருவர் மீதும் பாதுகாப்பு படையினரின் குண்டுகள் பாய்ந்தது தான் பரிதாபம்.


குடிசைத் தொழிலான கல்வீச்சு : பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவதை, ஸ்ரீநகர் இளைஞர்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆக்கி விட்டனர். கல்வீச்சில் பங்கேற்காத இளைஞர்களே இல்லை என்ற அளவுக்கு, இது ஒரு குடிசைத் தொழில் போலவே இது மாறி விட்டது. ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் வீதிகளுக்கு வந்து, பாதுகாப்பு படையினர் மீது ஆவேசத்துடன் கற்களை வீசுகின்றனர். சில நேரங்களில் தனியாக சிக்கிக் கொள்ளும் பாதுகாப்பு படையினரை, துவைத்து எடுக்கின்றனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்துகின்றனர். ஆறு வயது சிறுவர்களில் துவங்கி, 30 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவது என்பது ஒரு சாகச செயலாகவே மாறி விட்டது. இந்த விபரீதம் தான், உயிர் பலி வரை கொண்டு போய் விட்டு விட்டது. அப்பாவி இளைஞர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடச் சொல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பயங்கரவாத சதி : வன்முறையும், உயிர்ப்பலியும் அதிகரித்துக் கொண்டே போனதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு கூடி, இந்த பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தியது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார். காஷ்மீரில் சமீபகாலமாக நடந்த வரும் வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்து மத்திய அரசு தெளிவாகவே அறிவித்தது.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:காஷமீரில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் பின்னணியில் தேச விரோத சக்திகளின் சதி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும், இந்த கலவரத்துக்கும் தொடர்பு உள்ளது. இருந்தாலும், அமைதியான சூழ்நிலையை உருவாக்க, காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


ராணுவம் விரைந்தது : இதையடுத்து தான், தற்போது காஷ்மீருக்கு ராணுவம் விரைந்துள்ளது. 1,700 ராணுவ வீரர்கள் தற்போது ஸ்ரீநகர் உள்ளிட்ட கலவர பகுதியில் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், "காஷ்மீருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டாலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட மாட்டர். கூட்டத்தை கலைப்பது போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுவர்' என, தெரிவித்துள்ளது.


இதிலும் அரசியல்:காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ள சூழ்நிலையிலும், அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் நடத்த துவங்கி விட்டன. குறிப்பாக, ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே, இந்த விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.


முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,"இந்த கலவரத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு உள்ளது. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாய கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் மகன்கள் நேரடியாக இதில் சம்பந்தப் பட்டுள்ளனர்' என்றார்.


மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில்,"முக்கிய அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், தற்போதை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கியமான அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 20 நாட்களாக மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒமர் அப்துல்லா சில மணி நேரங்களை வீதியில் கழித்து பார்க்கட்டும். அப்போது தான் தற்போதைய பிரச்னையில் தீவிரம் அவருக்கு தெரியும்'என்றார்.


மத்திய அரசு முடிவு என்ன?தற்போது ராணுவத்தை அனுப்பி, பிரச்னையை ஓரளவுக்கு மத்திய அரசு சரி செய்தாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் இதுபோன்ற கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்புடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உறுதியான நடவடிக்கையாக இருப்பதோடு, இறுதியான நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும். காலம், காலமாக தொடர்ந்து வரும் பிரச்னையை ஒரே நாள் இரவில் தீர்த்து விட முடியாது. பிரிவினைவாத அமைப்பில் உள்ள மிதவாதிகளையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்கலாம்.


குறிப்பாக, அப்பாவி இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல், காஷ்மீரில் கலவரம் ஏற்படுவதற்கு பாகிஸ்தானும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது. பாகிஸ்தான் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விஷயத்தை கண்டிப்புடன் மத்திய அரசின் பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதற்கான அவசியத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது. மொத்தத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம் தான் இது. மத்திய அரசு சாதுர்யமாக செயல்பட வேண்டிய நேரம் இது.


தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் தொடர்ந்து செயல்படுகின்றன. அவற்றில் சில அமைப்புகளின் பெயர்கள்:
1. அல் முஜாகிதீன் போர்ஸ்
2. அல் உமர் முஜாகிதீன்
3. ஹர்கத்-உல்-அன்சார்
4. ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி
5. ஹிஸ்புல் முஜாகிதீன்
6. இக்வான் -உல்-முசல்மின்
7. ஜெய்ஸ்-இ-முகமது
8. லஷ்கர்-இ-தொய்பா
9. லஷ்கர்-இ-முகமதி
10. ஜமாத்-உல்-முஜாகிதீன்


காஷ்மீர் கலவரம் ஒரு புள்ளி விவரம் :காஷ்மீரில் கடந்த 1988ல் இருந்து நடந்து வரும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்த ஒரு புள்ளி விவரத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*பயங்கரவாத சம்பவங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை, 65 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை.
*வன்முறை மற்றும் கலவரம் காரணமாக இதுவரை 3,429 இளைஞர்கள் மாயமாகியுள்ளனர்.
*பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் 49 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*பாகிஸ்தானில் 37 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*இந்திய சிறைகளில் 125 காஷ்மீர் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
*பயங்கரவாத சம்பவங்களால் 75 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்கள், அங்கிருந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
*பயங்கரவாதிகளிடம் இருந்து 60 டன் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (2009 வரை).


சுற்றுலாவை சீர்குலைக்க சதி?காஷ்மீர், சுற்றுலாவுக்கு பிரபலமான இடம். கோடை காலத்தில் இங்குள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் சில ஆண்டுகள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நிலைமை சற்று சீரடைந்ததை தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரத் துவங்கினர். இதை சீர்குலைக்கும் வகையில் தான், தற்போது திட்டமிட்டு இங்கு கலவரம் நடப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் தொடர்ந்து இங்கு கலவரம் நடப்பதை இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுகின்றனர்.கடந்த 2008 கோடை காலத்தில், அமர்நாத் குகை கோவில் வாரியத்துக்கு, நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்னையில் கலவரம் வெடித்தது. இதனால், சுற்றுலாத் துறை அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு, இரண்டு இளம் பெண்கள் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறி, பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதனால் கடந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே, இந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் கலவரம் வெடித்துள்ளது.


இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கான சதியா? கடந்த இரண்டு ஆண்டாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. மிகப் பெரிய வல்லரசு நாடுகள் கூட, இந்த பொருளாதார மந்த நிலைக்கு தப்பவில்லை. பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா, இந்த பொருளாதார மந்த நிலையிலும் வெற்றிகரமாக தாக்கு பிடித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தாலும், பெரிய அளவிலான நிதி பிரச்னை ஏற்படவில்லை. ஆசிய பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா வல்லரசாக உருவாகி விடுமோ என்ற அச்சம், மற்ற வல்லரசு நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் மூலமாக அந்த நாடுகள் ஏற்படுத்தி வருகின்றனவோ என்ற சந்தேகத்தை பொருளாதார நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். காஷ்மீரில் தற்போது ஏற்பட்டு வரும் கலவரம் இதன் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதும் அந்த நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

Saturday, July 10, 2010

சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்

நாகர்கோவில் : 2020 ம் ஆண்டு, கிராமம் மற்றும் நகரங்களுக்கிடையிலான சமுக பொருளாதார இடைவெளி இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.


நாகர்கோவில் கோட்டார் டிவிடி மேல்நிலைப்பள்ளி பவள விழா கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடைபெற்றது. விழாவில் அப் துல் கலாம் பேசியதாவது: டிவிடி பள்ளி மாணவர் சிவதாணுபிள்ளையுடன் 40 ஆண்டு இணைந்துபணியாற்றியுள்ளேன். சிவதாணுபிள்ளை முயற்சியால் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், 200 மில்லியன் டாலர் செலவில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை, இன்று நாட்டுக்கு பத்து பில்லியின் டாலர் தந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சாணியாகவும் இருக்கிறது. இளைஞர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், எந்த லட்சியத்தையும் எட்ட முடியும். 2020 ம் ஆண்டில், இந்தியாவில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே சமூக பொருளாதார இடைவெளி இருக்க கூடாது. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாற வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைப்பது இளைஞர்களிடம் கடமையாகும், என்றார். விழாவில், விஞ்ஞானி டாக்டர் சிவதாணுபிள்ளை, சத்யபாமா பல்கலை வேந்தர் ஜேப்பியார், நூருல் இஸ்லாம் பல்கலை வேந்தர் மஜீத்கான், வி.ஜி. சந்தோஷம், எஸ். பத்மனாபன், குமரி அனந்தன் ஆகியோருக்கு அப்துல் கலாம் உலக சாதனையாளர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.


லஞ்சத்தை ஒழிக்க முடியுமா: படந்தாலு மூட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதிலளித்து கூறியதாவது:


* 2020 ல் இந்தியா வல்லரசாகும் திட்டத்தில் நாம் இதுவரை எத்தனை சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம்?
2020 ல் இந்தியா வல்லரசாக பொருளாதார வளர்ச்சி பத்து சதவீதமாக இருக்க வேண்டும். தற்போது அது 8.5 சதவீதமாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். விவசாயம், தகவல் தொழில் நுட்பம், விஞ்ஞானம், கல்வி என பல துறைகளிலும் ஒருங்கிணைந்து வளர வேண்டும்.


* லெமுரியா கண்டத்தை போல குமரி கண்டமும் அழியுமா?
அதற்கு வாய்ப்பே இல்லை. சூரியன் தன்னுøடைய ஒளியை இழக்கும் வரை, பூமி இயங்கி கொண்டிருக்கும். பத்து பில்லியன் ஆண்டு வரை பூமிக்கு எந்த பிரச்னையும் இல்லை.


* இந்தியாவில் கோர்ட்டு தீர்ப்புகள் தாமதமாவதை மாற்ற முடியுமா?
அதற்கு பல காரணங்கள்உள்ளது. தற்போது எல்லா கோர்ட்டுகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தீர்ப்பு விரைந்து கிடைக்கும்,என நம்புகிறேன்.


* இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைக்கல் எது?
"என்னால் முடியும்' என்ற எண்ணம் இளைஞர்களிடம் வந்தால் இந்தியா ஒளிரும்


* லஞ்சத்தை ஒழிக்க முடியுமா?
லஞ்சம் என்பது குடும்பத்தில் இருந்து துவங்குகிறது. நாட்டில் 20 கோடி குடும்பங்கள் உள்ளது. குழந்தைகள் பெற்றோர்களிடம் லஞ்சம் வாங்க கூடாது, என சொல்ல வேண்டும். லஞ்சப்பணத்தில் ஏதாவது வாங்கி கொடுத்தால், அதை குழந்தைகள் வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பெற்றோருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டு லஞ்சம் வாங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ எடுக்கலயோ போட்டோ…

என்னய்யா ஏதோ பிகர் தெரியும்ன்னு சொன்ன.. ஒரு மண்ணும் தெரியலயே


சொன்னா நம்புங்க.. நீங்க நினைக்கிறமாதிரி நா அந்த மாதிரியான ஆள் கிடையாது.. அந்த அளவுக்கு நா ஒத்து இல்ல.. சொன்னா நம்புங்க..





Friday, July 9, 2010

தமிழா அன்னை தமிழ் படும் பாட்டை நீயும் தெரிந்துகொள்!

அன்பு தமிழா!

இந்த கவிதை மாமேதை வாலி (தி. மு. க. கலைஞர் எடுபிடி ) தமிழ் செம்மொழி மாநாட்டில்
பாடிய கவிதை!

விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்‌னொரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது,
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

இத்துடன் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்த மாநாட்டின் என்தோ ஒரு
நாளிலும் அழைக்கப்படவில்லை என்பதையும், மாநாட்டில் பல ஆயிரம் மக்களுக்கு
சரியான உணவு, போக்குவரத்து வசதிகள் கிடைக்க வில்லை என்பதையும்,
முக்கிய பிரமுகர்கள் (முன்வரிசையில் அரசியல் வாதிகள் ) வரிசைக்கு மட்டும் மின்விசிறி
போடப்பட்டு இருந்ததையும் நினைத்து பெருமைகொள் தமிழா!

இனி தமிழ் வளர்ந்து விடும். M . A . தமிழ் படி, வேலை நிச்சயம் கிடைக்கும்.

தமிழுக்கு நடந்த மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு?

தமிழகத்தின் வேறெந்த பெரு நகரத்துக்கும் கிடைக்காத பெருமை, கொங்கு மண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. சங்கத் தமிழுக்கு செம்மொழி என்னும் தங்க மகுடம் கிடைத்ததற்காக, பொங்கு தமிழர்களெல்லாம் சங்கமித்துக் கொண்டாடிய, முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெருமைதான் அது.

இப்படியொரு பிரமாண்டத்தையும், பிரமிப்பூட்டும் கூட்டத்தையும் கோவை நகரம் முன்னெப்போதும் கண்டதில்லை. முந்தைய உலகத் தமிழ் மாநாடுகளை எல்லாம் மிஞ்சுகிற கூட்டம், செம்மொழி மாநாட்டுக்கு வந்தது என்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஐந்து நாட்களில் ஆறு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தது அரசு. ஆனால், மாநாட்டு நாட்களிலும், நீட்டிக்கப்பட்டுள்ள கண்காட்சி நாட்களிலும் வரும் மக்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில், இந்த மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதும் உண்மை. தமிழுக்கு இன்னொரு முறை இப்படியொரு மாபெரும் திருவிழா நடத்தப்படுமா, அது இந்தளவுக்கு வெற்றி பெறுமா என்பதெல்லாம் சந்தேகமே. அதேநேரத்தில், இதெல்லாம் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமா, உணர்வோடு ஒன்று கூடிய கூட்டமா என்றொரு சிக்கலான கேள்வி எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

தமிழுக்காக நடத்தப்பட்ட இந்த மாநாட்டால் தமிழ் எந்த அளவுக்கு பாதுகாப்பு பெறும் அல்லது வளர்க்கப்படும் என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இந்த மாநாட்டை எந்த நோக்கத்தில் கருணாநிதி நடத்தியிருந்தாலும், அதில் தமிழின் மீதான அவரது தீராக்காதலும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான், தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுமாறு தமிழறிஞர்களைக் கேட்டுக் கொண்டார் முதல்வர். அரசியல் தலைவர்களிடமும் இதையே எதிர்பார்த்தார் அவர். எல்லோரும் சொல்லும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வருமென்றும் அவர் உறுதியளித்தார். நிறைவு விழாவில் இடம் பெறும் தனது பேச்சு, இன்னொரு "பட்ஜெட்' உரையாக இருக்குமென்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டுள்ளார். ஆனால், முதல்வர் கேட்ட ஆணையையும், ஆலோசனைகளையும் வழங்கியிருக்க வேண்டிய வேண்டியவர்கள், அந்த கடமையைச் செய்தார்களா என்றால் இல்லவே இல்லை. ஆய்வரங்கத்தில் நல்ல பல தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன; ஆய்வுக் கட்டுரைகளில் ஆழ்ந்த கருத்துக்களும் தென்பட்டன. முதல் முதலாய், இலக்கியத்தோடு இணையம் சேர்ந்ததைப் போல, தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைய மாநாடும் இணைந்தே நடந்தது. கண்காட்சியும் தமிழினத்தின் பழமையை, பாரம்பரியத்தை, நாகரிகத்தை இந்த தலைமுறைக்குச்சொல்லும் விதத்தில் நன்றாகவே உள்ளது. பழமையான இலக்கிய நிகழ்வுகளை நினைவூட்டிய எழிலார் பவனியும் புதுமையாகவே இருந்தது. இப்படி எல்லாவற்றிலும் தமிழின் வாசம் இருந்தது; ஆனால் தமிழ் சுவாசமாய் இல்லை.

தமிழை வளர்த்தெடுக்க அரசே ஆலோசனை கேட்கும் அற்புதமான வாய்ப்பை அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் அப்பட்டமாகத் தவற விட்டார்கள். மாறாக, அதிகார மையங்களுக்கு புகழ் பாடக் கிடைத்த வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொண்டனர். ஆய்வரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம் எல்லாவற்றிலும் புகழ்ப்பாக்களே அதிகம் இடம் பெற்றன. சில அறிஞர்கள், கட்டுரைத் தலைப்புகளிலேயே, தங்களது தீவிர விசுவாசத்தை வெளிப்படுத்தினர். கட்சி மேடைகளில் சரவெடியாய் தமிழ் பொழியும் பல அரசியல் தலைவர்களும், மாநாட்டு மேடையில் துதிபாடிகளாய் மாறிப் போயினர். ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள், அரசியல் மாநாடு நடத்தினாலும், அரசு விழா நடத்தினாலும் இத்தகைய துதிபாடல்களைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், செம்மொழி மாநாட்டில் செவியிரண்டும் கிழிந்து போகும் அளவுக்கு, பலரும் உரக்கத் துதி பாடியது, முதல்வருக்கே சற்று நெருடலாய் இருந்திருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி, தமிழை வளர்ப்பதற்கான பல நல்ல ஆலோசனைகளையும் இந்த மாநாட்டில் பலர் வழங்கியிருக்கிறார்கள். தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டும்; தமிழ் வளர்ச்சித்துறையை நிறுவனமாக மாற்றி, வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் தமிழைப் பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும்; மேல்நிலைக் கல்விகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும்...என இந்த பட்டியல் நீள்கிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, அதன் அடிப்படையில் சிறப்பு மிக்க முக்கிய அறிவிப்புகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்பது பலரது எதிர்பார்ப்பு. தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கும் தமிழும், தடங்களை இழந்து வரும் தமிழினமும், தமிழ்நாடும் தலை நிமிர வேண்டுமென்பது பலரது விருப்பம். இதையெல்லாம் உணராதவரில்லை முதல்வர் கருணாநிதி. அவரே "பட்ஜெட்' போல அறிவிப்பு என்றதும், பலருக்குள்ளும் படபடப்பு அதிகரித்திருக்கிறது. சரித்திரத்தில் பதிவு பெறப்போகும் இப்படியொரு மாநாட்டில் அவர் வெளியிடும் அறிவிப்புகளும் வரலாற்றுச் சிறப்புடையதாக இருக்குமென்பதில் யாருக்கு மாற்றுக்கருத்து இருக்கும்?

நன்றி :- தினமலர்

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை….. ,இந்தியனாக இருக்க தேவை இல்லை….. ,தமிழனாகவும் இருக்க தேவை இல்லை ,மனிதனாக இருந்தால் போதும்

ஒரு மனிதனின் கடிதம்:
தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் அனுப்பியது

உதம் சிங்" யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.
1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது
மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும்
டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த ஒருவன்தான்
உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து
கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer),
பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான்.
ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer
மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.
துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம்
அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள்
செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு
ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது
விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொல்கிறான். மேலும் அந்த
விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள்
மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord
Lamington) பிழைத்து கொள்கிறார்கள்.

மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று
இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து.... உதம்
சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம்
சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 மக்களை கொன்றதற்கு நான் அவனை
கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின்
எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி
கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும்
முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று
புகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்..................

400 பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael
O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....

ஆனால் இங்கிருந்து ராஜீவ் காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை
இங்கிருந்து இலங்கை ஈழத்திற்கு சென்று 5400 பொது மக்களை மற்றும் 800
பெண்களை கற்பழித்து கொன்றதற்கு, சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது
தவறா?

“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி
எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது
நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே)
இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர
வேண்டும்...... வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?
அவர்கள் செய்தால் தியாகி பட்டம்... நாம் செய்தால் தீவிரவாதி பட்டமா?

நல்ல நியாம்டா சாமி.............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன
என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள்
அனைத்தும் எங்கே புரிய போகிறது.......

ஆனால் ஒருவருக்கு புரிந்தது......



''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி
ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப்
போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது
கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம்
தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும்
விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை
வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நீ
எனக்கு மகனே இல்லை' என்று சொல்ல...

யோணன் அந்த lபுறக்கணித்திருக்கிறார்!''

ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர்
சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான
தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது
மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................


மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................



1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு
கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh.
அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய
இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக
சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்....
மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள்
இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து
இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது... ?

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம்
என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக
அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட)
பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17
ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம்
பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு
ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம்
சீகியர்களிடம் இல்லை..

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி
நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று
கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள்
எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........

அட நாய்களே.....

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவும் இருக்க தேவை இல்லை

மனிதனாக இருந்தால் போதும்.....

சிந்தித்து பாருங்கள் நண்பர்களே

சீக்கியர்களின் மயிருக்காக Turban அணியும் உரிமை கேட்டு பிரான்ஸ் அரசிடம்
பேசிய மன்மோகன்.
ஈழ தமிழர்களுக்காக சிங்கள ராஜபக்க்ஷே விடம் பேச மறுப்பது ஏன்?
சீக்கியனின் மயிரை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்.....?
உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இது போய் சேரட்டும்....





"மாண்ட வீரர் கனவு பலிக்கும்,
மகிழ்ச்சி கடலில் எங்கள் தமிழ்மண் குளிக்கும்"....

Thursday, July 8, 2010

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பிடு‌ங்க‌ள் சுறுசுறு‌ப்பாக வாழு‌ங்க‌ள்

வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் அவ‌ர்க‌ள்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.

ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌நிறை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மரு‌ந்தாகவு‌ம் கூட வாழை‌ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப்பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அ‌ந்த கால‌த்‌தி‌ல் அத‌ற்காக‌த்தானோ எ‌ன்னவோ வெ‌ற்‌றிலையுட‌ன் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து‌க் கொடு‌க்கு‌ம் முறை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களு‌க்கு‌த் தெ‌ரியாததா எ‌ன்ன?

முத‌லி‌ல் மல‌‌ச்‌சி‌க்க‌ல் ‌வியா‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌னிதனை‌க் கா‌‌ப்பா‌ற்று‌ம் இய‌ற்கை மரு‌ந்து வாழை‌ப்பழ‌ம்தா‌ன். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடி‌த்தா‌ல் சோ‌ம்ப‌ல் போயே‌ப் போ‌ச்சு.

மேலு‌ம், நெ‌ஞ்செ‌ரி‌ப்பு, உட‌ற் பரும‌ன், குட‌ற்பு‌ண், உட‌லி‌ல் வெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌க்கவு‌ம், மன அழு‌த்த‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.

புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் புகை‌ப்‌பிடி‌த்தலை ‌விடு‌‌ம்போது வாழை‌ப்பழ‌ம் அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌விடுபடலா‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது.

Workshop on Computational methods!

NATIONAL WORKSHOP and CONFERENCE ON
(SPONSORED BY DST, NEW DELHI)
COMPUTATIONAL METHODS for NONLINEAR DYNAMICS
SEPTEMBER 22-25, 2010
Bharathidasan University, Tiruchirappalli - 24
Objectives:
  • To expose young researchers to different numerical methods essential for exploring the various aspects of nonlinear dynamical systems.

  • To learn the modern computational methods specifically useful for investigating complex nonlinear phenomena of recent interest.

  • About the Workshop

    • The first three days of the meeting will be conducted in the form of a workshop and the last day will be devoted to a conference.

    • In the workshop eminent scientists from across the country will give lectures on various basic computational tools in nonlinear dynamics.

    • In the conference recent findings on different topics in nonlinear dynamics using computational methods will be presented.

    TOPICS
    • Basic Numerical Algorithms
    • Dissipative and Hamiltonian Systems
    • Time-Delay Dynamical Systems
    • Experimental Time Series Analysis
    • Spatio-Temporal Patterns
    • Infinite-Dimensional (PDE) Systems
    • Quantum Chaos
    • Bose-Einstein Condensates
    • Nonlinear Electronic Circuits
    • Fractals and Multifractals

    Participation

    • Young research students and faculty who have just started working on nonlinear dynamics using computational methods are eligible to participate in the meeting.

    • The applicant should submit a brief note (200 words) highlighting the need for his/her participation.

    • The number of participants will be limited to 75.

    • Sleeper class train fare will be provided to participants in need of travel support.

    • There is no registration fee for the workshop and conference.

    • How to Apply

      • Application form can be downloaded from the CNLD website http://cnld.bdu.ac.in/cmnd2010/A specimen copy of the application is provided below.

      • Duly filled-in and signed application should be submitted to Prof. S. Rajasekar, School of Physics, Bharathidasan University, Tiruchirapalli 620 024, Tamilnadu, either by post or by e-mail (cmnd2010@gmail.com) not later than July 30, 2010.

      • Selected participants will be informed by August 6, 2010.s

Monday, July 5, 2010

Jobs in ICICI bank!

Applications are invited for the Probationary officers job in ICICI Bank.

Qualification: Any Degree with 55% pass.

Age Limit: Below 25

For further details: http://www.icicicareers.com/PO_7_Apply.htm

Jobs Waiting for you at BARC!

The applications are invited for the post of stipendiary trainees at the BARC in Mumbai, Tharapur and Kalpakkam. Those who will finish the training successfully will be absorbed for the permanent job.

Vacancy name: Stipendery officer

Total vacancy : 201 (SC - 36, ST - 36, OBC - 83, PH - 01 and UR - 45)

Salary : Rs. 9,300 - 34,800 + grade pay Rs. 4,200 (Only if you join in the job after training)

Age Limit minimum 19 and maximum 24 on 01/05/2010 (relaxation will be applied for the reserved catogory)

Vacancy in detail:
Mechanical Eng. - 32
Chemical Eng. - 45
Instrumentation - 08
Electronics - 13
Electrical - 11
IT - 03
metallurgy - 01
Telecommunication - 01
chemistry - 33
Physics - 48
Computer Science - 06

Physical Needed: Min Height - 160cms.
Min Weight - 45.5 Kgs.

last Date for Application : 15.07.2010

Application will be sent to
Deputy Establishment officer (R -I),
Bhabha Atomic Research Centre,
Trombay,
Mumbai - 400 085
For further full information : www.barc.gov.in

Sunday, July 4, 2010

Interest Subsidy against the Educational Loan

Central Scheme to provide Interest Subsidy (CSIS) for the period of moratorium on Educational Loans taken by students from Economically Weaker Sections from scheduled banks under the Educational Loan Scheme of the Indian Banks’ Association to pursue Technical/Professional Education studies in India

The Government of India has launched a scheme to provide full interest subsidy during the period of moratorium i.e., Course Period plus one year or six months after getting job, whichever is earlier, on loans taken by students belonging to Economically Weaker Sections from scheduled banks under the Educational Loan scheme of the Indian Banks’ Association, for pursuing any of the approved courses of studies in technical and professional streams, from recognised institutions in India

For Further Details - http://education.nic.in/scholarship/Schol-Studentloan.asp

Friends If you need the copy of the Government please write to me
jothi.phy07@gmail.com


மக்களின் தேசம் ! - வி.உஷா - சிறுகதை, நன்றி:- தினமலர்

அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன்.
நெஞ்சம் கனத்தது.
மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல... வரிசையாக நான்கைந்து தெருக்கள். அரசு, நெட்டி, கொன்றை என்று, வலுவான அடர் மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்து வருவது, மாலை வேளைகளில் எனக்கு மகத்தான அனுபவம். பறவைகளின் உற்சாகக் கூவல்களும், கூடு வந்தடையும் தாய்ப் பறவைகளும், காற்றின் தாளத்திற்கு நாட்டிய மாடும் கிளைகளும் இலைகளுமாக, ஒரு புது உலகத்திற்கு வந்ததைப் போலிருக்கும்.
அதிலும், அந்த கடைசித் தெரு இன்னும் சிறப்பானது. அடர்ந்த, கரும்பச்சையான பூவரச மரங்களின் ஊடாக, ஏழை மக்களின் குடிசை களும், அவற்றை ஒட்டி ஓடும் கிளியாறும், அந்தக் குழந்தைகளின் விளையாட்டு குதூகலங் களுமாக, மனது, கடின உழைப்பிற்குப் பிறகான நல்லதொரு இதமான மனநிலையைக் கொடுக் கும்.
இன்று, அவை எல்லாமே பாழாகிக் கொண்டிருந்தன!
மரங்கள் வெட்டப்பட்டு, சாலையின் குறுக்கே கிடந்தன. அவற்றிலிருந்து வெளிப் பட்ட பச்சை வாசனை, ஏதோ மாமிச மார்க்கெட்டுக்குள் நுழைந்ததைப் போலி ருந்தது. இலைகளும், கிளைகளும் மவுன மொழியில் ஓவென்று கதறியழுவதைக் கேட்க முடிந்தது. அடுத்த அதிர்ச்சியாக, குடிசைகள் புல்டோசரால் இடிக்கப்பட்டு, அலுமினிய பாத்திரங்கள், துணிகள், கெரசின் டின், அடுப்பு என்று, அந்தக் குடித்தனங்கள் அலறிக் கொண்டிருந்தன. நடு வீதிக்கு வந்திருந்தன.
"பறக்கும் ரயில் வரப்போகுதாம். இந்த வழியாத்தான், டபுள் ட்ராக் போகுதாம். கவர்மென்ட் உத்தரவு!' என்று சொன்னார்கள்.
மானுடத்தின் விடிவிற்காக வந்த மரங்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. தினக்கூலி நாற்பதோ, அறுபதோ பெற்று, அன்றாட உழைப்பாளியாக, வாழ்வின் விளிம்பு நிலையில் நிற்கும் மனிதர்களை, இன்னும் 30 கி.மீ., தள்ளி குடியமர்த்த நினைக்கும் அரசின் திட்டத்தை கேட்க சகிக்கவில்லை.
பாறையாக கனத்துப்போன நெஞ்சுடன் வீடு வந்து சேர்ந்தபோது, அப்பா கூடலூரிலிருந்து வந்திருந்தார்.
தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
லாப்டாப்பில், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பற்றி எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த தீபக்கிடம், காபியை நீட்டினேன்.
""அப்பா போன் பண்ணினாரா?''
""ஆமாம்மா... காம்ப் நாளைக்கு முடிஞ்சு, நாளை நைட் புறப்படறாராம்...''
""சாப்பிட்டியாப்பா?''
""யெஸ்மா... மாங்காய் பருப்பும், காரட் சாலட்டும் பிரமாதம்... தாத்தா வந்தாச்சு... பாத்தியா?'' என்றான்.
""பாத்தேன். முகம் சரியா இல்லே... பயணக் களைப்பா இருக்கும்... உனக்கு மெயில் வந்துதா? ஐ.ஐ.எம்., ஆமதாபாத் என்ன சொல்றான்?'' என்று, டம்ளரை வாங்கிக் கொண்டேன்.
""ஆமதாபாத், கோல்கட்டா, பெங்களூரு மூணுமே, மெயில் மேல மெயில் அனுப்பிட்டுதான் இருக்கும்மா... எனக்குதான் கொஞ்சம் குழப்பம்...''
""குழப்பமா... ஏன்? என்ன குழப்பம்?'' என்று அப்பா வந்தார்.
""ஐ.ஐ.டி.,ல டாப் டென்ல இவன் ஒருத்தன்பா... இவன் கேட்கிற குரூப்புக்கு, லேப் பெசிலிட்டி, இந்த மூணுல எதுல நல்லா இருக்குன்னு பார்க்க வேண்டாமா? அதுசரி... டூர் எப்படி இருந்தது? சரியா சாப்பிடலையா? சித்தி எப்படி இருக்கா?'' என்று அவர் கையிலும் காபியை வைத்தேன்.
""தீபக்...'' என்றார் அழுத்தமாக அவனைப் பார்த்து.
""என்ன தாத்தா?''
""இந்த தேசமே வேண்டாம்ப்பா... ஐ.ஐ.எம்., - எம்.ஐ.டி.,ன்னு போட்டு குழப்பிக்காதே... உன் மார்க்குக்கு, ஸ்டான் போர்டே கிடைக்கும்பா... லண்டன், அமெரிக்கான்னு போயிடு... இது நாசமாப் போன சிஸ்டம்... வேண்டாம்பா...'' என்றார். சடாரென்று முகம் வெந்து, உதடுகள் துடித்தன.
""நானும் அப்படித்தான் நினைக்கிறேன்...'' என்றேன் கவலையுடன்.
""என்னம்மா சொல்றே?'' என்று அவன் குழப்பத்துடன் பார்த்தான்.
""மொதல்ல தாத்தா சொல்லட்டும்...''
""ஊட்டி...'' என்றார்; கண நேரத்தில் கண்கள் கலங்கி விட்டன.
அவரையே பார்த்தேன்... தீபக் எழுந்து வந்தான்.
""ஊட்டி, கூடலூர் எல்லைப் பகுதியில இருக்கிற வீட்டைப் பாக்கத்தான் போனேன். பூர்வீக வீடு; என் தாத்தா கட்டின வீடு. பாட்டி, கன்றும், மாடும் வெச்சு வளர்த்த வீடு. அப்பா அதை கோவில் மாதிரி பாதுகாத்தார். சர்ச் பக்கத்து ஏழைக் குழந்தைகளுக்கு, அந்த வீட்டுலதான் இலவசப் பாடம் எடுத்தார். அம்மா, ஏழைகளுக்காகவே பயிர் பண்ணி, சகாய விலைக்கு கொடுத்தாள். என் கைக்கு அந்த வீடு வந்தபோது, இலவச லைப்ரரியா மாத்தினேன்... தெரியுமில்லையா?'' என்றார்.
""தெரியாம என்ன தாத்தா?'' என்று தீபக் அவர் கையைப் பற்றினான். ""ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை, மன நிறைவோட போய் அந்த வீட்டைப் பாத்துட்டு வருவீங்களே... பத்து புஸ்தகமாவது புதுசா கொண்டு போய் சேர்ப்பீங்களே...''
""இனிமே எதுவும் இல்லடா தீபக்...'' என்று, அவன் கைகளில் முகம் பற்றி அழுது விட்டார்.
""ஆயிரம் அடி உயரத்துல இருந்து சரிந்த மண்ணும், பாறையும், வழியில் கிடைச்சதை எல்லாம் வழிச்சு எடுத்திருக்கு. நானூறு இடங்கள்ல நிலச்சரிவுகள். விடாமல் அடிச்ச பெருமழை மட்டுமா காரணம்? இல்லப்பா... மனிதன் செஞ்ச குற்றங்கள்... மழை, வெள்ளத்தை, எந்தத் தடையும் இல்லாம அதன் போக்குலயே விட்டிருந்தா பிரச்னை இல்லையே...
"" தண்ணி போகிற பாதை முழுக்க, எக்கச்சக்க வீடுகள், காட்டேஜ்கள், உணவு விடுதிகள், ஓட்டல்கள்ன்னு ஆக்கிரமிச்சிருக்கு. தடுப்புகள் இருக்கும்போது, தண்ணீர் எப்படி வழிந்து ஓடும்? தேங்கி மண்ணுக்குள் இறங்கும். மெல்ல சகதி ஆகிடும். மறுபடி, மறுபடி, தேங்கி, மண் அரிக்கப்பட்டு, பிடிமானம் இளகி நிலம் சரிஞ்சுது.
""காளான்களாக, கல்குவாரி முளைசிருக்கு. போதாதற்கு, சட்டத்திற்கு புறம்பா மலைகளை வெட்டித் தள்ளுறது, நீலகிரி முழுக்க நடக்குது. நம்ம வீடு, பூமிக்குள்ள புதைஞ்சு போச்சு சியாமளா...'' சிறுவனைப் போல விம்மல் தெறித்து அழுதார் அப்பா.
""சரிப்பா... ப்ளீஸ்... அழாதீங்க... நீங்க சொன்னது போல, மனிதத் தன்மை இல்லாம, ஏன், ஜீவகாருண்யம் இல்லாம, குறைஞ்சபட்ச சுற்றுச்சூழல் உணர்வு கூட இல்லாத இயந்திர உலகத்துல வாழ றோம்பா... வேற என்ன வழி இருக்கு நமக்கு, இதுல இருந்து தப்பிச்சு போகி றதுக்கு?'' என்று கரகரத்தேன்.
""தீபக்குக்கு இருக்கே... அவன் தப்பிக் கலாமே... இந்த நாடும் வேண்டாம்; ஜனங்களும் வேண்டாம்டா தீபக். நீ அமெரிக்கா போ... உன் திறமையும், புத்திசாலித் தனமும், இந்த தேசத்துக்கு பயன்படக் கூடாது. நன்றி கெட்ட மிருகங்கள். தீபக்! நீ கிளம்புப்பா...'' என்று அப்பா கர்ஜித்தார்.
ஊமை அழுகையாக மனது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது. ரோஜாவை அரைத்து குல்கந்து செய்யும் உலகம் இது என்று விம்மிக் கொண்டிருந்தது.
""என்னம்மா... நீயும் பாக்கலே, நானும் பாக்கலே... ஊட்டுல என் பொண்ணுதான் எண்ணிப் பாத்து சொல்லிச்சு... பாரு, ரெண்டு நோட்டு கூடுதலா கொடுத்திருக்கே...'' என்று தேவானை வந்து நீட்டினாள்.
காலையில் அவளுக்கு, ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தேன். எண்ணிக் கொடுக்கவில்லையா?
""சார்... நடேசன் சார்...'' என்று யாரோ அழைக்க, வாசலுக்கு சென்றாள்.
மெலிந்த உருவம். ஐம்பது வயது மதிக்கலாம் போன்றவர். முகத்தில் இவ்வளவு வலி ஏன் என்று தெரியவில்லை.
""என் பேர் வரதன்... பெரியவர் இருக்காரா?'' என்றார்.
""உட்காருங்கள். இதோ கூப்பிடறேன்...'' என்று, உள்ளே போய் அப்பாவிடம் சொன்னேன்.
""வரதனா... யாரது? அந்த பெயர் நினைவில் இல்லையே?'' என்றபடி அப்பா வந்தார்.
உட்கார்ந்திருந்தவரை ஒரு நிமிடம் பார்த்து, ஞாபகத்திற்கு கொண்டு வந்து விட்டார்.
""வாங்க... வாங்க... பெண்ணுக்கு ஆபரேஷன் முடிஞ்சுதா? நல்லா இருக்காளா?'' என்று புன்னகைத்தார்.
வந்தவர் முகத்தில் புன்னகை தோன்றவில்லை. தலை மெல்ல குனிந்து நிமிர்ந்தது; உதடுகள் ஒரு நிமிடம் துடித்தன.
சட்டைப் பைக்குள் கைவிட்டு, ஆயிரம் ரூபாய் தாளை எடுத்தார்.
""என் மகள் சாந்திக்கு, இதய ஆபரேஷன் செய்ய என்னிடம் பணமில்லை. உங்களை மாதிரி ஈர மனசுக்காரர்கள்கிட்ட மடிப்பிச்சை கேட்டு, லட்ச ரூபாய் சேர்த்து அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனேன். போகிற வழியிலேயே அவள் போயிட்டாள் சார். இந்த பணத்திற்கு தேவையே இல்லாமல் போய் விட்டது. யார்கிட்டே, எவ்வளவு வாங்கினேன்னு, பேர், அட்ரசோட எழுதி வெச்சிருக்கேன். இது, நீங்க கொடுத்த ஆயிரம் ரூபாய் சார்... உங்க நல்ல மனசுக்கு நன்றி. அம்மா, பெரியவரை நல்லபடியா பாத்துக்குங்க... வரேன் சார்...''
கையெடுத்து கும்பிட்டார்.
அப்பாவும், நானும் விக்கித்து நின்றோம்.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
""ஆமதாபாத் பெஸ்ட்டுன்னு ரகு சொல்றாம்மா... அங்கயே படிக்கிறேன்...'' என்று தீபக் வந்து நின்றான்.
கதவைத் திறந்து, போனவரையே பார்த்துவிட்டு எங்கள் பக்கம் திரும்பினான்.
""எல்லா ஊர்கள்லயும், எல்லா தேசத்துலயும், நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு தாத்தா... நம்ம ஊர் சிஸ்டம், நியாயத்தின் பேர்லயும், தர்மத்தின் பேர்லயும் உண்டாக்கப்பட்டது தான். ஆனா, அதை கண்காணிக்க வேண்டிய மனிதர்கள் குறைபாட்டோட இருக்கிறதால, எல்லாம் பாழாகிட்டிருக்கு...
""ஆனால், எல்லாரும் அப்படி இல்லே தாத்தா... தர்மபுத்திரர்களும், பீஷ்மர்களும் உங்க வடிவுல, இதோ வந்துட்டுப் போறாரே இவர் வடிவுல வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க... அமெரிக்கா, லண்டன்ல மட்டும் குற்றங்கள், குறைகள் இல்லையா தாத்தா? வியட்னாம், கியூபா, ஈரான், ஈராக், ஆப்கன்னு, நாடு நாடா ஊடுருவி, ஆயுதங்கள், ஆயில்ன்னு அமெரிக்கா வம்புச் சண்டைக்கு அலையலையா?
""ஸ்கூல் பையன்கள்ல முக்கால்வாசி பேர், துப்பாக்கிகளோட அமெரிக்காவுல சுத்தறதில்லையா? வாட்டர்கேட் ஊழல், மோனிகா லெவன்ஸ்கின்னு வெள்ளை மாளிகை களங்கப்படலையா? லண்டன் அரண்மனை, எத்தனை நாடுகள்ல காலனி அமைச்சது? நம்மளையே, நானூறு வருஷம் அடிமைப்படுத்தி வெக்கலையா? தாத்தா... நம்பிக்கையோட இருக்கலாம்... நாம நல்லவர்களா இருப்போம் தாத்தா... சூழலையும் நல்லதா ஆக்குவோம்... காலப்போக்குல எல்லாமே கம்பீரமா நிமிர்ந்து நிற்கும் தாத்தா...''
தீபக்கை, அப்பா கண்ணீருடன் அணைத்து, சம்மதத்துடன் தலையாட்டினார்.
அந்தக் காட்சியை மறைத்து விடக்கூடாதே என்று, என் கண்ணின் ஈரத்தை வேகமாக துடைத்தேன் நான்.

Friday, July 2, 2010

ராக்கெட் வரலாறு

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update

கி.பி 1044 ஆண்டை ஒட்டி இடைக்காலச் சீனாவில் முதன்முதல் ராக்கெட் கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப் படுகிறது. ஆனால் 1232 இல் சைனா மங்கோலியரை எதிர்த்துப் போரிட்ட போதுதான் மெய்யாக அவை போர்க்களத்தில் நேராகப் பயன்படுத்தப் பட்டன. 1696 இல் ராபர்ட் ஆண்டர்ஸன் என்னும் ஆங்கிலேயர் எப்படி ராக்கெட் குழல்வடிவுகள் [Rocket Moulds] பண்ணுவது, எப்படி எரிசக்தி உந்து தூள்களை [Rocket Propellants] தயாரிப்பது, எப்படி அவற்றின் பரிமாணங்களைக் கணக்கிடுவது என்று விளக்கிடும் ஈரடுக்குத் தொகுப்பு நூலை எழுதினார். மைசூர் புலிமன்னர் எனப்படும் திப்பு சுல்தான் கைவசம் 1750 ஆம் ஆண்டில் 5000 எறிகணைகள் இருந்ததாகத் தெரிகிறது. 1780 இல் இந்திய அரசருடன் போரிட்ட “குண்டூர் யுத்தத்தில்” [Battle of Guntur] முதன்முதல் பிரிட்டீஷ் படைகள் இந்திய எறிகணைகளால் தாக்கப் பட்டன. 1799 ஆம் ஆண்டில் மைசூரில் பிரிட்டீஷ் ராணுவத்துடன் நடந்த போரில் ஹைதர் அலி, அவரது புலிப் புதல்வன் திப்பு சுல்தான் இருவரும் மூங்கில் கம்புகளில் கட்டி விடுத்த எறிகணை ராக்கெட்டுகள், எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்தன. திப்பு சுல்தான் தோற்றுப் போன பின்பு பிரிட்டீஷ் படையினர் ஸ்ரீரங்க பட்டணத்தில் 700 பயன்படும் எரியா ராக்கெட்டுகளையும், 9000 பயன்பட்டுக் காலியான எரிந்த ராக்கெட்டுகளையும் கண்டதாக அறியப் படுகிறது. எட்டு அங்குல நீளம், ஒன்றரை முதல் மூன்று அங்குல விட்டமுள்ள இரும்புக் குழல் எறிகணைகள் 4 அடி நீளமுள்ள மூங்கில் முனைக் கம்புகளில் கட்டப் பட்டிருந்தன. அவை எறிந்து ஏவப்படும் போது சுமார் 3000 அடித் தூரம் பாய்ந்து செல்லும். அவை யாவும் மைசூர் தாரமண்டல் பேட்டையில் தயாரிக்கப் பட்டவை.
மைசூர்ப் போருக்குப் பிறகு 1804 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் வில்லியம் காங்கிரீவ் [William Congreve] என்பவர் திப்பு சுல்தான் பயன்படுத்திய எறிகணையைக் காப்பி எடுத்து விருத்தி செய்து 9000 அடி தூரம் செல்லும்படி மேம்படுத்தினார். அந்த எறிகணைகள் 1812 - 1815 ஆண்டுகளில் அமெரிக்க சுதந்திரப் போருக்குப் பிறகு அமெரிக்ககனடாச் சண்டையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பிரிட்டன் பயன்படுத்தியதாக அறியப் படுகிறது.
காங்கிரீவ் ராக்கெட்:
வில்லியம் காங்கிரீவ் தனது ராக்கெட்டில் இரும்புக் குழலும், கருப்புத் தூளுமிட்டு, ஏவுநிறையைச் சமப்படுத்த 16 அடிக் கம்பைப் பயன்படுத்தினார். 1806 இல் பிரிட்டீஷ் கப்பல் படையினர் காங்கிரீட் ராக்கெட்டுகளைக் பிரெஞ்ச் வீரன் நெப்போலியன் படைகள் மீது வீசினர். அடுத்து ஈரோப்பில் 1807 ஆண்டில் கோபன்ஹேகனுக்கு (டென்மார்க்) எதிராக 25,000 காங்கிரீவ் எறிகணைகள் உந்தி எறியப்பட்டன. பிறகு வில்லியம் ஹேல் [William Hale] என்னும் அடுத்தோர் பிரிட்டீஷ் நிபுணர் கம்புகளற்ற எறிகணைகளை ஆக்கினார். அமெரிக்க ராணுவம் 1846 - 1848 ஆண்டுகளில் நடந்த மெக்ஸிகன் போரிலும், ஆப்ரஹாம் லிங்கன் காலத்து உள்நாட்டுப் போரிலும் [Civil War (1861 - 1865)] காங்கிரீவ் ராக்கெட்டுகள் பயன்பட்டதாகத் தெரிகிறது.
பிரமாண்டமான புவிஈர்ப்புச் சக்தியை மீறி செயற்கைக் கோள்களும், விண்வெளிக் கப்பல்களும், அண்ட வெளி நிலையங்களும் வானில் ஏவப்பட்டு, பூமியைப் பவனி வரத் தூக்கிச் சென்ற அசுர ராக்கெட் எஞ்சின்களை ஆக்கிய நவீன எஞ்சினியர், விஞ்ஞானிகளில் ஒப்பற்றவர், வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun]. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பேரழிவு உண்டாக்கிய ஜெர்மன் V2 ராக்கெட் களை, கட்டளை ஏவுபாணங்களாய் [Guided Missiles] ஏவிய, வெர்னர் பிரெளன் தான் அமெரிக்காவின் புகழ் பெற்ற ராக்கெட் விஞ்ஞானி.

Lateral Thinking : Nice one ... Attempt to think.....!



Many years ago in a small Indian village,
A farmer had the misfortune of owing a large sum of money to a village moneylender. The Moneylender, who was old and ugly, fancied the farmer's beautiful Daughter. So he proposed a bargain. He said he would forgo the farmer's debt if he could marry his Daughter. Both the farmer and his daughter were horrified by the Proposal.So the cunning money-lender suggested that they let Providence decide the matter. He told them that he would put a black Pebble and a white pebble into an empty money bag. Then the girl would have to pick one pebble from the bag.

1) If she picked the black pebble, she would become his wife and her father's debt would be forgiven. 2) If she picked the white pebble she need not marry him and her father's debt would still be forgiven. 3) But if she refused to pick a pebble, her father would be thrown into Jail.

They were standing on a pebble strewn path in the farmer's field. As They talked, t he moneylender bent over to pick up two pebbles. As he Picked them up, the sharp-eyed girl noticed that he had picked up two Black pebbles and put them into the bag. He then asked the girl to pick A pebble from the bag. Now, imagine that you were standing in the field. What would you have Done if you were the girl? If you had to advise her, what would you Have told her? Careful analysis would produce three possibilities:
1. The girl should refuse to take a pebble. 2. The girl should show that there were two black pebbles in the bag And expose the money-lender as a cheat. 3. The girl should pick a black pebble and sacrifice herself in order To save her father from his debt and imprisonment.
Take a moment to ponder over the story. The above story is used with The hope that it will make us appreciate the difference between lateral And logical thinking.
The girl's dilemma cannot be solved with Traditional logical thinking.
Think of the consequences if she chooses The above logical answers.
What would you recommend to the Girl to do?
Well, here is what she did ....
The girl put her hand into the moneybag and drew out a pebble. Without Looking at it, she fumbled and let it fall onto the pebble-strewn path Where it immediately became lost among all the other pebbles. "Oh, how clumsy of me," she said. "But never mind, if you look into the Bag for the one that is left, you will be able to tell which pebble I Picked." Since the remaining pebble is black, it must be assumed that she had Picked the white one. And since the money-lender dared not admit his Dishonesty, the girl changed what seemed an impossible situation into An extremely advantageous one.
MORAL OF THE STORY:
Most complex problems do have a solution. It is only that we don't Attempt to think.

மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்!

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.

உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன் அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் யாருடைய தனிப்பட்ட கருத்தின்படியும் இயங்குவதில்லை. அவர்கள் கருத்தைப் பொருட்படுத்துவதுமில்லை. அது பிடிக்காதவர்கள் உலகில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்?

அல்கெமிஸ்ட் என்ற பிரபல நாவலில் இதற்கு ஒரு அழகான உதாரணத்தைக் காணலாம். ஒரு சிறிய மலை மேல் அழகான கண்ணாடிப் பொருள்க¨ள் விற்கும் கடை ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் மிக நன்றாக வியாபாரம் நடந்த கடையில் காலம் செல்லச் செல்ல வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மலை அடிவாரத்திலேயே நிறைய கடைகள் வந்து விட யாரும் கண்ணாடிப் பொருட்களை வாங்க அந்த மலைக்கு மேல் வருவதை நிறுத்தினர். அந்த கடைக்காரருக்கோ அந்த வியாபாரம் தவிர வேறு வியாபாரமும் தெரியாததால் வேறு வழியில்லாமல் அதையே நடத்திக் கொண்டு வந்தார்.

சாண்டியாகோ என்ற இளைஞன் அவர் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் மிகக் குறைவாகவே தந்த கடைக்காரர் நடக்கும் விற்பனையில் அதிக கமிஷன் தருவதாகச் சொன்னார். வியாபாரமே இல்லாததால் கமிஷன் எங்கே தரப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்கு. இரண்டே நாளில் உண்மை நிலவரத்தை சாண்டியாகோ உணர்ந்தான். வேறு கடைகளே இல்லாத காலத்தில் செய்த வியாபார முறையையே இப்போதும் கடைக்காரர் பின்பற்றுகிறார் என்று புரிந்தது. அவன் அவரிடம் கடைக்கு வெளியே ஒரு ஷோ கேஸ் வைத்து அழகான புதிய பொருட்களைப் பார்வைக்கு வைத்தால் கீழே செல்பவர்களில் சிலரை அது ஈர்க்கக்கூடும் என்று சொன்னான். கடைக்காரருக்கு பெரிய ஆர்வம் இல்லா விட்டாலும் அப்படியே செய்தார். புதியவர்கள் பலரும் வர ஆரம்பிக்க விற்பனையும் அதிகரித்தது.

ஒரு நாள் மலையேறிய ஒருவர் குடிக்க நல்ல தேநீர் கடை கூட இல்லை என்று அங்கலாய்த்தது சாண்டியாகோ காதில் விழுந்தது. அவன் கடைக்காரரிடம் சொன்னான். "நாம் தேநீரும் தயாரித்து நம்முடைய அழகான கண்ணாடிக் கோப்பைகளில் தந்தால் தேநீரும் விற்கலாம். பலரும் வீடுகளிலும் அது போல் குடிக்க கண்ணாடிக் கோப்பைகளை வாங்கிக் கொண்டு போவார்கள்" என்றான். அவருக்கு அதிலும் பெரிய பலன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் சம்மதித்தார்.

அவன் சொன்னபடியே பலரும் வந்து தேநீர் குடித்து அது போன்ற அழகான கோப்பைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். நாளடைவில் அந்தக் கடை பிரபலமாகி வியாபாரமும் அதிகரித்து மேலும் இரண்டு பேரை வேலைக்கு எடுத்துக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. சாண்டியாகோ வந்திராவிட்டால், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப புதிய வழிகளைப் பின்பற்றியிரா விட்டால் அந்தக் கடையை அவர் விரைவில் மூடி விட வேண்டி இருந்திருக்கும்.

மாறுதல் இயற்கை என்றாலும் அது ஏற்படுத்தும் புதிய சூழல் நமக்குப் பிடிபடாமலும், புரியாமலும், சிறிது அசௌகரியமாகவும் இருப்பது இயல்பே. ஆனால் மாறுதல் ஏற்படும் போது இது வரை கிடைத்திராத வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற ஞானத்தோடு மாறுதல்களை எதிர்கொள்வதே அறிவு.

சில சமயங்கள் மாறுதல்கள் நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பனவாகவும் இருப்பது உண்மையே. இருப்பவை அனைத்தையும் இழக்க நேர்வது போன்ற மாறுதல்கள் பூதாகாரமாக இருக்கலாம். ஆனால் கவலையில் ஆழ்வதும், விதியை நொந்து கொள்வதும் அதற்குத் தீர்வாகாது. மாறுதல்கள் உணர்த்தும் பாடங்களைப் படித்து, தரும் வாய்ப்புக¨ளை முறையாகப் பயன்படுத்தி மீண்டு வருவதே வெற்றி. சிலவற்றை இழந்தால் ஒழிய நம் பார்வை வேறுபக்கம் திரும்பாது என்பதற்காகவே கூட விதி நம்மை சிலவற்றை இழக்க வைக்கலாம். ஒருவிதத்தில் அது நமக்கு அனுகூலமே ஒழிய நஷ்டமல்ல.

சொய்சீரோ ஹோண்டா என்ற இளைஞர் படிக்கும் காலத்திலேயே கார்களுக்குப் பயன்படுத்தும் புதிய பிஸ்டன் ஒன்றை உருவாக்கி அதை டயோட்டா கார் கம்பெனிக்கு அனுப்பினார். அந்த வகை பிஸ்டனைப் பயன்படுத்தினால் பல விதங்களில் காரோட்டம் மேம்பாடடையும் என்று அவர்களுக்குத் தெரிவித்தார். அது தங்களுடைய தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்து டயோட்டா கம்பெனியினர் திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து அந்தப் பிஸ்டனை மேம்படுத்தி வடிவமைத்து அதை டயோட்டாவுக்கு மறுபடி அனுப்ப அந்தப் புதிய பிஸ்டனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தயாரித்துத் தரும் உரிமை ஹோண்டாவுக்கு அளிக்கப்பட்டது.

ஹோண்டா தன்னிடம் இருப்பவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார். தொழிற்சாலை கட்டும் பணி முடியும் தருவாயில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமாகியது. ஹோண்டா தன் மனைவியின் நகைகளை விற்று, நண்பர்களிடம் கடனை வாங்கி மீண்டும் தொழிற்சாலை கட்டத்துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டிடம் முடிவடையும் நேரம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. எதிரிகளின் விமானத் தாக்குதலால் அந்தக் கட்டிடமும் தவிடுபொடியானது.

இதையெல்லாம் மாற்றம் என்று சொல்வதை விட நாசம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றாலும் ஹோண்டா விதியை நொந்து கொண்டு முடங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கடுமையான பெட்ரோல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஜப்பானைத் தாக்கியது. கார்களை இயக்க முடியாமல் பலரும் அவதியுற்றனர். ஹோண்டாவும் எங்கும் காரை எடுத்துச் செல்ல முடியாமல் தத்தளித்தார். வேறு வழி இல்லாமல் தன் சைக்கிளுக்கு மோட்டார் ஒன்றைப் பொருத்திக் கொண்டு வீட்டுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் தங்களுக்கும் அது போன்ற ஒரு மோட்டார் பொருத்திய சைக்கிள் செய்து தருமாறு கேட்க ஆரம்பித்தனர். ஹோண்டா செய்து தர ஆரம்பித்தார். சீக்கிரமே அவரிடமிருந்த மோட்டார்கள் எல்லாம் தீர்ந்து போயின.

தன் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் ஹோண்டா மீண்டும் ஒரு தொழிற்சாலை கட்ட எண்ணினார். இந்த முறை பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, தன் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையாக. ஆனால் இருப்பதையெல்லாம் முன்பே இரு முறை தொழிற்சாலை கட்டித் தொலைத்திருந்த அவருக்கு முதலீடு செய்யப் பணம் இருக்கவில்லை. சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவெடுத்தார்.

ஜப்பான் முழுவதும் இருந்த 18000 சைக்கிள் கடைக்காரர்களுக்கு தன் புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கடிதம் எழுதினார். அன்றைய சூழ்நிலையில் மிகவும் சுலபமாக விலை போகும் பைக்கைத் தயாரிக்க அவர்களால் முடிந்த அளவு முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று அவர் விவரித்தார். 18000 கடைக்காரர்களில் சுமார் 5000 பேர் முதலீடு செய்ய முன் வந்தனர். அவருடைய கனவுத் தொழிற்சாலை உருவாகியது.

முதலில் அவர்கள் தயாரித்த மோட்டார் பைக் பெருமளவில் விலை போகவில்லை. காரணம் அதன் எடையும், பெரிய வடிவமும். எனவே ஹோண்டா அந்த இரண்டையும் சரி செய்து சில மாற்றங்களுடன் புதிய மோட்டார் பைக்கை உருவாக்கினார். அது உடனடியாக வெற்றி பெற்றது. பின் வெற்றி அவரை நிழலாகப் பின் தொடர்ந்தது. கார்களையும் உருவாக்க ஆரம்பித்தார். இன்று ஹோண்டா கார்ப்பரேஷன் உலகப் புகழ் பெற்ற பெரிய நிறுவனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை ஆழமாக உணர்ந்திருங்கள். வழக்கம் என்கிற சுகமான சங்கிலி புதியன வரும் போது அதிருப்தி கொள்ளக் கூடும். ஆனாலும் வழக்கமான வாழ்க்கையில் சிறைப்பட்டு இருந்து விடாதீர்கள். மேற்போக்காகப் பார்க்கையில் பிரச்னைகள் போலத் தோன்றினாலும் எல்லா மாற்றங்களும் தங்களுடன் வாய்ப்புகளையும் சேர்த்தே அழைத்து வருகின்றன. வரும் மாற்றங்கள் நம் அபிப்பிராயங்களுக்கேற்ப மாறிவிடுவதில்லை. மாற்றங்கள் காலடி மண்ணையே அசைக்கிறதாகக் கூட சில நேரங்களில் இருக்கலாம். செயலிழந்து மட்டும் போய் விடாதீர்கள். அது கண்டிப்பாய் தோல்வி என்னும் புதைகுழியில் உங்களை ஆழ்த்தி விடும். எனவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு வாய்ப்புகளைக் கவனியுங்கள். எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படுங்கள். கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவீர்கள்.


A warm welcome to you all!

My dear friends,
I am here for not just time pass! But pass the time by sharing some meaningful contents. Here you can find the educational, humanity, social, individual, national and global issues. Also, entertainment too! Let us enjoy the blogand leave your comments to improve the blog. The contents will be both in tamil and english.

With best regards,
Jothimurugan